தமிழ் மன்றக் குழு செயல்பாடு

26-Jul-2024

💥மூளைக்கு வேலை 💥வாசித்தல் பயிற்சி 💥காட்டின் வரைப்படத்தாள்

💥மூளைக்கு வேலை:எழுத்துகளை கரும்பலகையில் எழுதும் பொழுது மாணவர்கள் சொற்களை அறிகின்றனர். எழுத்துகளை வட்டமிடும் பொழுது மாணவர்கள் எழுத்துக்களை அறிகின்றனர். வட்டமிட்ட எழுத்துக்களை சேர்க்கும் பொழுது சொல் உருவாகிறது என்பதை அறிகின்றனர்.

💥 வாசித்தல் பயிற்சி : திருக்குறளை ஓலைச்சுவடியில் பார்க்கும் பொழுது ஓலைச்சுவடியின் அமைப்பை  மாணவர்கள் அறிகின்றனர். ஓலைச்சுவடியில் வாசிக்க செய்யும் போது கற்றல் திறன் மேம்படுகிறது. திருக்குறளின் சீரமைப்பை மாணவர்கள் அறிகின்றனர்.

💥 காட்டின் வரைப்படத்தாள் : மாணவர்களை காடு பற்றிய பாடலை பாட வைத்தல். மாணவர்களை காட்டின் நன்மைகள் பற்றி பேச வைத்தல்.காட்டில் வாழும் விலங்குகள் பற்றியும் அவற்றின் தனித்தன்மைகள் பற்றியும் பேச வைத்தல். காட்டு விலங்குகளின் சப்தங்களை மாணவர்களை எழுப்ப செய்து அவர்களை ஊக்குவித்தல்.